முதல் உலகத் தமிழ்க் களஞ்சியம் வெளிவந்துள்ளது
தமிழுக்குப்பெரும் அணிகலனாக உலகத் தமிழ்க்களஞ்சியம் அண்மையில் உலகத்தரத்தில் வெளிவந்துள்ளது. தமிழ், தமிழ்நாடு, தமிழர் தொடர்பாக 16,500 செய்திளுடன், 2141 பக்கங்களில் 3 தொகுதிகளாக அமைந்துள்ள இக்களஞ்சியத்தைத் திட்டமிட்டு 12 ஆண்டுகள் உழைத்துத் தொகுத்தவர் அண்ணாநகரைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் இ.ஜே.சுந்தர். பதிப்பித்தவர் மலேசியாவின் உமா பதிப்பக உரிமையாளர் டத்தோ சோதிநாதன், இதற்கு சிறப்பு அறிவுரைஞராக(special adviser) அண்மையில் மறைந்த டாக்டர் க.ப.அறவாணனும்(Manonmaniam Sundaranar University retd vice Chancellor), சீராளராக (Editor) நலங்கிள்ளியும் உள்ளனர். 50 அறிஞர்கள் இப்பணியில் பங்களிப்பு வழங்கியுள்ளனர். தமிழ் மொழி தொடர்பான இலக்கியம், இலக்கணம், வரலாறு, நாட்டியம், இசை, சமயம் முதலியன மட்டுமன்றித் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் உள்ள இவை தொடர்பானவற்றையும் இதில் காணலாம். அமைப்புகள், சுற்றுலா, புவியியல், இதழ்கள், வேளாண்மை, விலங்கியல், விழாக்கள், பெருமக்கள், மருத்துவம், தொழிலகங்கள், திரை முதலிய 39 தலைப்புகளில் இவற்றைத் தேடுவது மட்டுமன்றி அகர வரிசையிலும் அனைத்தையும் தேடும் வண்ணம் அமைத்துள்ளது.. இதுவரை தமிழில் வந்த 800 இதழ்கள், 96 தமிழக ஆறுகள், 760 இலக்கியங்கள், , தமிழகத்தின் 600 ஊர்கள், 720 தமிழகத் தாவரங்கள், 230 விலங்குகள், பறவைகள், 145 தொழில் நிலையங்கள், 2016 வரை வந்த 4000 திரைப்படங்கள், தமிழகத்தின் அத்தனை திருத்தலங்கள், ஈழம் பற்றி முழுமையான பதிவுகள் என 100 நூல்களுக்கு இணையான செய்திகளை வழங்கும் ஒரே நூலகமாக இது விளங்குகிறது. இதன் இந்திய விலை ரூ3000 என்பது இதன் தரத்திற்கும் அளவிற்கும் மிகக்குறைவே. இதன் இந்திய விற்பனை உரிமையாளர் Rythm book distributors. மேலும் விவரங்களுக்குத் தொகுப்பாசிரியர் டாக்டர் இ.ஜே.சுந்தருடன் தொடர்பு கொள்ளலாம். செல்பேசி: 9841068832 மின்னஞ்சல்: ejsundar@gmail.com