திரு.லேனா தமிழ்வாணனின் 60வது பிறந்தநாளுக்கு வாழ்த்து

என் மாணவப்பருவத்தில் பூச்செண்டு நடத்திய நாள்களில் என்னை ஊக்குவித்த   என் மதிப்பிற்குரிய தமிழ்வாணனின் மகனாக, சுட்டி இதழ் நடத்துகையில் என் பத்திரிகைப்பணிக்கு உதவிக்கரம் நீட்டிய அருமை நண்பராக, என் முனைவர் பட்ட ஆய்வில் தோள்கொடுத்த தோழனாக, மலேசிய நண்பன் இதழில் நான் சென்னைப்பொறுப்பாளராக இருந்தபொழுது அவரின் அடுக்ககத்தை எங்கள் அலுவலகத்திற்கு வழங்கிய எடுத்துக்காட்டுக்குரிய  வீட்டு உரிமையாளராக, நான்   ஜீப் வாங்கியபோது அதனைப்பராமரிக்க வழிநடத்திய ஆலோசகராக, இன்னும் பலநேரங்களில் தீர்க்கத் திணறிய பிரச்சினைகளிலும், குழப்பங்களிலும் எனக்கு ஆறுதலும், தெளிவும் வழங்கிய உடன்பிறப்பாக, இறுதியாக என் மகன் திருமணத்தில் வாழ்த்த வந்தபோது  பொறுமையாக பொதுவரிசையில் நின்று சிறப்பித்துச்சென்ற எளிமையின் முன்மாதிரிகையாளனாக, மொத்தத்தில்,

 

நான் போற்றிப்பேணும் பெறற்கரிய இனிய உறவாக என்றும்  எண்ணி மகிழ்வேன்.

அன்றைய அறுவது என்பது இன்றைய நாற்பது என்பதால் நூறாண்டுக்கும்  மேலாக வாழ்ந்து பலரையும் வாழவைக்க வாழ்த்துகிறேன்...........ஜே.சுந்தர், முன்னைத் தமிழ்த்துறைத்தலைவர், .பெ.ஜெயின் கல்லூரி, துரைப்பாக்கம்.