அறிமுகம்
நான் “சுட்டி” நடத்திய அந்த உழைப்பு நிறைந்த காலத்தில் தான் (1981-90) என் எழுத்தும், சமூகப்பார்வையும் கூர்மை அடைந்தன. இ.ஜே.சுந்தர் ஆகிய நான் அப்போது “சுட்டி சுந்தர்” என்று அறியப்பட்டேன்.
எனவே அந்தப் பயன்மிகுந்த காலத்தைத் தொடரும் வகையில் இனி “சுட்டி சுந்தர்” என்ற பெயரிலேயே இந்தத் தளத்தில் செயல்பட விரும்புகிறேன்.
நான் இதுவரை எழுதியவை அனைத்தும் இதில் இடம்பெறும். நான் நடத்திய 108 சுட்டி இதழ்களையும், மாணவப்பருவத்தில் நடத்திய 25 பூச்செண்டு இதழ்களையும், இத்தளத்தில் தூசி தட்டாமல் வாசிக்கலாம்.
சுட்டியை இன்னும் நினைவுகூரும் என் நெஞ்சார்ந்த வாசகர்களை இந்தத் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். வான்பாடி, மலேசியா நண்பன், தமிழ் முரசு, தன்னம்பிக்கை, நயனம், மயில், தங்கம், வெற்றிவேந்தன், முகம் ஆகிய இதழ்களில் என் கட்டுரைகளை வாசித்த நண்பர்கள்…